BREAKING: விசிக தனித்துப்போட்டி… திருமாவளவன் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

By Soundarya on பங்குனி 24, 2026

Spread the love

2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மூன்று தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் விசிகவிற்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த முடிவில் உடன்பாடு இல்லாததால் ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளில் தனித்துக் களம் காணப்போவதாக அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இந்தத் தனித்துப் போட்டி முடிவை எடுத்துள்ளது. இதனால் வரவிருக்கும் தேர்தலில் விசிகவின் வாக்கு வங்கி மற்றும் கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளில் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.