“செருப்பு காலால் மிதித்து உருளைக்கிழங்கு மசாலா” சாட் கடையில் நடந்த அருவருப்பான செயல்… வீடியோ எடுத்துப் போட்ட சிறுமி..!!

By Soundarya on பங்குனி 24, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஒரு பிரபலமான சாட் (Chaat) கடையில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லோனி பகுதியில் உள்ள ‘கிருஷ்ணா சாட் பண்டார்’ என்ற கடையில் இந்த அருவருப்பான சம்பவம் நடந்துள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் வேகவைத்த உருளைக்கிழங்குகளை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, காலில் செருப்பு அணிந்தபடியே மிதித்து கழுவும் காட்சி பதிவாகியுள்ளது. இரவு நேரத்தில் ரகசியமாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் கடையில் இத்தகைய அநாகரிகமான செயல் அரங்கேறியுள்ளது.

   

   

இந்த வீடியோவை எடுத்த சிறுமி பின்னணியில் பேசுகையில், “என் அம்மாவும் இங்கிருந்துதான் அடிக்கடி ஆலு டிக்கி சாட் வாங்கி சாப்பிடுவார். உருளைக்கிழங்கை இப்படித்தான் காலால் மிதித்து கழுவுகிறார்கள் என்பதை அம்மாவிடம் காட்ட வேண்டும்” என்று வேதனையுடன் கூறுகிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த மக்கள் புகாரளித்ததன் பேரில் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.