இல்லத்தாசிகளுக்கு ஷாக் நியூஸ்!.. கேஸ் சிலிண்டர் எடை குறைகிறதா?… வெளியான பகீர் தகவல்…!!!

By Muthu Mani on பங்குனி 24, 2026

Spread the love

மேற்கு ஆசியாவில் போர் நீடித்து வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டால் பல குடும்பங்களில் விறகு அடுப்பு பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமில்லாமல் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை குறைக்க வேறு வழியில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்கு முன் 27 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது 41 நாடுகளாக விரிவு படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் 14.2 கிலோவிலிருந்து 10 கிலோ எடையாக விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. மேலும் எடையை குறைக்கும் அதே நேரத்தில் விலையும் குறைத்து அதற்கான ஸ்டிக்கர்களை சிலிண்டரில் ஒட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எடை குறைப்பு நாடு தழுவிய அளவில் போராட்டங்களுக்கு வித்திடும் என்பதால் இந்த விவாகரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போது நம் நாட்டின் தேசியக்கொடியுடன் 6 எண்ணெய் கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.