தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாகத் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு இந்திய தேசிய லீக் தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.
ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியைத் தமிழகத்தில் உருவாக்க நடிகர் விஜய்யால் மட்டுமே முடியும் எனத் தாங்கள் மனதார நம்புவதாக இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் நாகூர் ராஜா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தவெகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், அனைத்துத் தொகுதிகளிலும் தங்கள் கட்சி நிர்வாகிகள் தீவிரமாகப் பணியாற்றுவார்கள் என்றும், இந்த ஆதரவு வெறும் வார்த்தையோடு நிற்காமல் களப்பணியாகத் தொடரும் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
