‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘சேவல்’ போன்ற பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவருக்கு, நாளடைவில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் திரையுலகில் இருந்து சற்றே ஒதுங்கியிருந்த அவர், தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவேற்றி வரும் பூனம் பாஜ்வாவிற்கு, அங்கு சுமார் 40 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்பாளர்களாக உள்ளனர். இதன் மூலம் இணையவாசிகள் மற்றும் தனது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அவர், தொடர்ந்து பல சுவாரஸ்யமான கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறார்.
சமீபத்தில் ரசிகர்களுடனான கலந்துரையாடலில் பேசிய அவர், பெண்கள் ராணிகளாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தோழியாகவோ, காதலியாகவோ அல்லது மனைவியாகவோ இருக்கும் பெண்கள் அந்தந்த குடும்பத்தின் மகாராணிகள் என்றும், அவர்களின் அழகையும் அன்பையும் மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், “எல்லாவற்றையும் மறந்துவிடலாம்” என்று எளிதாகக் கூறும் பெண்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் ஆண்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
