தேர்தலுக்கு 3 நாள் முன்பு அந்தநாள்… விஜய்க்கு விழுந்த பலத்த அடி… தவெக-வின் இறுதிக்கட்டப் பிரச்சாரம் முடங்குமா..? அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

By Soundarya on பங்குனி 16, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய்க்கு, தேர்தல் நேரத்தில் புதிய சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ள விவாகரத்து வழக்கில், வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நேரத்தில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருப்பது அவரது தேர்தல் பிரச்சாரத்தைப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. தவெக-வின் முக்கிய முகமாக இருக்கும் விஜய், இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டிய அந்தச் சமயத்தில் நீதிமன்றம் செல்ல நேரிடுவது அக்கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த இக்கட்டான சூழலில் இருந்து விஜய்க்கு நீதிமன்றம் விலக்கு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை நேரில் ஆஜராவதிலிருந்து அவருக்கு விலக்கு கிடைக்காவிட்டால், அது தவெக-வின் இறுதிக்கட்டத் தேர்தல் பணிகளில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.