அனைத்து ரேஷன் கார்டுக்கும்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு… உடனே கிளம்புங்க….!

By Nanthini on பங்குனி 16, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகையைப் பதிவு (e-KYC) செய்வதற்கான காலக்கெடுவை மார்ச் 25-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை இந்தப் பணியை முடிக்காதவர்கள் உடனடியாக தங்களுக்குரிய ரேஷன் கடைகளுக்குச் சென்று கைவிரல் ரேகையைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் இப்பணியைச் செய்யத் தவறினால், அந்த உறுப்பினர்களின் பெயர்கள் ரேஷன் அட்டையிலிருந்து நீக்கப்படவும், அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. எனவே, குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் உரிய நேரத்திற்குள் இந்த நடைமுறையைப் பூர்த்தி செய்து தடையின்றி ரேஷன் பொருட்களைப் பெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.