நவீன அடுக்குமாடி குடியிருப்புகளில் நிலவும் தனிமையின் கோர முகத்தை வெளிப்படுத்தும் வகையில் அண்மையில் இணையத்தில் வைரலான ஒரு வீடியோ மனதை உருக்குவதாக அமைந்துள்ளது. 16-வது மாடியில் வசிக்கும் ஒரு மகன், தனது வயதான தாய் பால்கனியில் நின்றபடி யாராவது மனித நடமாட்டம் தெரிகிறதா என்று ஏங்குவதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
மேலும் பகல் நேரத்தில் பலமுறை பால்கனிக்கு வரும் அந்தத் தாய், அக்கம் பக்கத்து வீடுகளில் யாராவது பால்கனிக்கு வருகிறார்களா அல்லது கீழே யாராவது செல்கிறார்களா என்று தேடுகிறார். ஆனால், எங்கு பார்த்தாலும் கான்கிரீட் சுவர்களையும் புறாக்களையும் மட்டுமே பார்க்க முடிகிறதே தவிர, ஒரு மனித முகத்தைக் கூட பார்க்க முடிவதில்லை என்று அந்த மகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
“>
இதனால் பெரிய நகரங்களில் உள்ள இத்தகைய வானளாவிய கட்டிடங்கள் வசதிகளைத் தந்தாலும், மனிதர்களுக்கிடையேயான நெருக்கத்தையும் உரையாடலையும் பறித்துவிட்டதாக இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 16-வது மாடியில் இருப்பதால் அந்தத் தாயால் அடிக்கடி கீழே இறங்கிச் சென்று மக்களுடன் பழக முடிவதில்லை அதே சமயம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யார் என்று கூட தெரியாத அளவிற்குத் தனிமை அவர்களைச் சூழ்ந்துள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த நெறிஞர்கள், இது ஒரு “நவீனச் சிறைச்சாலை” போன்ற வாழ்க்கை என்றும், முதியவர்களுக்கு இத்தகைய சூழல் கடும் மன அழுத்தத்தைத் தரும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் முன்னேறினாலும், அடிப்படை மனித நேயத்திலும் சமூக உறவுகளிலும் பின் தங்கிவிட்டோமோ என்ற கேள்வியை இந்த நிகழ்வு எழுப்புகிறது.
