BREAKING: அதிமுகவுடன் கூட்டணி… கடைசி நேரத்தில் அறிவித்தது முக்கிய கட்சி…!!

By Soundarya on பங்குனி 12, 2026

Spread the love

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) புதிய கட்சியாக முல்லை மக்கள் பேரவை இணைந்துள்ளது. நேற்று நடைபெற்ற அக்கட்சியின் கூட்டத்தில் அதன் நிறுவனத் தலைவர் நாசே ராமச்சந்திரன் பங்கேற்றார். வரும் தேர்தலில் NDA கூட்டணிக்குத் தனது முழு ஆதரவை வழங்குவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக காங்கிரஸில் பொருளாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்தவர் நாசே ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய அவர், தற்போது கடைசி நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக அடங்கிய கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.