பகீர்..! “உன்னை நான் அனுபவிக்கலாமா..?” பேருந்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்… வீடியோ எடுத்து வெளியிட்ட பெண்..!!

By Soundarya on பங்குனி 12, 2026

Spread the love

பெண்களுக்கு எதிரான அநாகரிகச் செயல்கள் பொதுப் போக்குவரத்தில் தொடர்கதையாகி வரும் நிலையில், பேருந்து பயணத்தின் போது ஒரு பெண் துணிச்சலாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் தனது நண்பர்களுடன் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு, நள்ளிரவு 12 மணி முதல் ஒரு நபரால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

பேருந்தில் அந்தப் பெண்ணுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு இளைஞர், நள்ளிரவு முதல் விசித்திரமான சத்தங்களை எழுப்பி அநாகரிகமாகப் பேசத் தொடங்கியுள்ளார். அந்தப் பெண் ஆரம்பத்தில் இதைப் பொருட்படுத்தாமல் அமைதியாக இருக்க முயற்சித்துள்ளார். ஆனால், அந்த நபரோ எல்லை மீறி தனது மொபைல் திரையில் “You wanna enjoy with me?” (என்னுடன் என்ஜாய் செய்ய விருப்பமா?) என ஆபாசமாக எழுதி அந்தப் பெண்ணிடம் காண்பித்துள்ளார்.

   

இந்த அநாகரிகச் செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக அந்த நபரைத் தட்டிக்கேட்டதோடு, அவரதுச் செயலை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இரவு முழுவதும் அதே பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய சூழலில், தான் மிகவும் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்ததாக அந்தப் பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யக் கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.