தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ₹1,000-லிருந்து ₹2,000-ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார். திமுகவின் இந்தத் திட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது என்றும், அவ்வாறு நிறுத்த நினைத்தால் அவர்களின் வீட்டுப் பெண்களே அவர்களுக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
திமுகவின் இந்தத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே அதிமுகவினர் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைத்துள்ளதாக முதலமைச்சர் விமர்சித்துள்ளார். தங்களது திட்டத்தை ‘டாப் அப்’ செய்து எதிர்க்கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்து வருவதாகக் கூறிய அவர், மகளிர் நலனில் திமுக அரசு கொண்டுள்ள அக்கறையை இந்த நிகழ்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
