தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய்யின் பல வெற்றிப் படங்களில், அவருக்குப் பின்னால் துடிப்பாக நடனமாடியவர் டான்ஸ் மாஸ்டர் ஜானி. 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமான இவர், தற்போது விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார்.
திரைத்துறையில் விஜய்யுடன் நீண்டகாலமாகப் பணியாற்றிய ஜானி, தற்போது அரசியலிலும் அவருடன் கைகோர்த்துள்ளதற்கு விஜய் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜானியின் இந்த முடிவுக்குப் பலரும் தங்களது ஆதரவை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
