வணிகர்களுக்கு ரூ.10,000… தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க…!!

By Soundarya on பங்குனி 9, 2026

Spread the love

தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், புதியதாக சிறுகடை அமைக்க ரூ.10,000 அரசு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் வணிகர்கள், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டாயம் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

தகுதியுள்ள வணிகர்கள் இதற்கான விண்ணப்பங்களை வணிகர் நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவோ அல்லது தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள வணிகர் நல வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்றோ சமர்ப்பிக்கலாம். சிறு முதலீட்டில் தொழில் தொடங்கும் வணிகர்களுக்கு இந்த நிதியுதவி ஒரு முக்கிய ஊக்கத்தொகையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.