2026 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த உற்சாகமான வெற்றிக்கு பிறகு, இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா சர்மாவுடன் மைதானத்தில் வெற்றியைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடினார். இவர்களின் ஜோடியான கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
வெற்றிக்குப் பிறகு மைதானத்தில் இந்திய தேசியக் கொடியைத் தோளில் அணிந்தபடி வலம் வந்த ஹர்திக் பாண்டியா, மஹிகா சர்மாவுடன் இணைந்து நடனமாடினார். அப்போது மஹிகா சர்மா ஹர்திக்கின் கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பையும் வாழ்த்தையும் வெளிப்படுத்திய தருணம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தனது வாழ்க்கையில் மஹிகா வந்த பிறகுதான் அனைத்தும் சிறப்பாக நடப்பதாகவும், அவர் தனது ‘லக்கி சார்ம்’என்றும் ஹர்திக் உணர்ச்சிப்பொங்கப் பேட்டியளித்துள்ளார்.
இந்தக் கொண்டாட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் மகன் அகஸ்தியாவும் கலந்து கொண்டார். மஹிகா சர்மா, ஹர்திக்கின் மகனுடன் இணைந்து மைதானத்தில் விளையாடியது மற்றும் ஹர்திக்கிற்கு உற்சாகம் கொடுத்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த 2025-ஆம் ஆண்டு முதல் மஹிகா சர்மாவை ஹர்திக் பாண்டியா காதலித்து வரும் நிலையில், இந்த உலகக்கோப்பை வெற்றி அவர்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகக் கருதப்படுகிறது.
மைதானத்தில் இவர்களின் கொண்டாட்டம் ஒருபுறம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும், மற்றொருபுறம் இது பொதுவெளியில் சற்று ‘எல்லை மீறிய கொண்டாட்டம்’ என விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இருப்பினும், இன்னும் பத்து ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி மேலும் பத்து ஐசிசி கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று ஹர்திக் பாண்டியா உறுதியுடன் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஹர்திக் பாண்டியா மீண்டும் ஒருமுறை தனது அதிரடி ஆட்டத்தாலும் தனிப்பட்ட வாழ்வின் மகிழ்ச்சியாலும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.
