லீக்கானது தவெக தேர்தல் அறிக்கை… ஃப்ரீ பஸ் முதல் ₹10 லட்சம் காப்பீடு வரை… விஜய்யின் அதிரடி லிஸ்ட்…!!!

By Rajeshwari on பங்குனி 7, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு அதிரடியான வாக்குறுதிகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதில் முக்கியமாக, தமிழக அரசு தற்போது வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகையை விட கூடுதலாக, மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், சென்னையில் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம், மாநகராட்சிப் பேருந்துகளில் இருபாலருக்கும் இலவசப் பயணம், மற்றும் பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ‘அண்ணா காப்பீட்டுத் திட்டம்’ போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் தவெகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

   

இதனால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ரீதியாகவும் மாணவர்களைக் கவரும் வகையில் பல திட்டங்களைத் தவெக முன்னெடுக்க உள்ளது. 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட நிதி உதவி போன்ற திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.

   

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் நீட் தேர்வு பயிற்சி மையங்களை அமைப்பது இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள விஜய், இத்தகைய அதிரடி வாக்குறுதிகளின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளைப் பெருமளவில் ஈர்க்கத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.