“உனக்கு ஒரு புருஷன் பத்தாதா டி”… அக்கா செய்த காரியம்.. ஆத்திரத்தில் தம்பி செய்த நடுங்க வைக்கும் சம்பவம்… நள்ளிரவில் அலறிய தூத்துக்குடி..!

By Nanthini on பங்குனி 2, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரா (35). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த சுமித்ரா, கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் அருகே ஒரு வாடகை வீட்டில் தனியாகக் குடியேறியுள்ளார். அங்கு அவர் வசித்து வந்த நிலையில், அவரது நடத்தையில் மாற்றங்கள் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.

சுமித்ராவுக்குப் பல ஆண்களுடன் தவறான பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரது தம்பி முத்துராஜா (27), தனது அக்காவைக் கண்டித்துள்ளார். பலமுறை எச்சரித்தும் சுமித்ரா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜா, தனது அக்காவின் செயலால் குடும்பத்தின் மானம் பாதிக்கப்படுவதாகக் கருதி, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

   

இந்நிலையில், நேற்று இரவு சுமித்ராவின் வீட்டிற்கு முத்துராஜா மற்றும் அவரது நண்பர் வசந்த் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு தங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தின் உச்சக்கட்டமாக, முத்துராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது அக்கா சுமித்ராவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுமித்ரா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் முத்துராஜாவைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குடும்ப மானத்தைக் காக்கவே தனது அக்காவைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, முத்துராஜா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த வசந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தம்பியே சொந்த அக்காவை வெட்டிக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.