“டேய் சீக்கிரம் வாடா.. ஆசையோடு அழைத்த காதலி”…. நம்பி சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்…!

By Nanthini on பங்குனி 2, 2026

Spread the love

திருமணத்தை மறைத்து காதலித்த மருத்துவருக்கு, அவரது காதலியே விபரீத தண்டனை அளித்த கொடூரச் சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த அமீனா என்ற இளம்பெண், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விசர்ஜீத் என்ற மருத்துவரை கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், விசர்ஜீத் தனக்கு ஏற்கனவே திருமணமான ரகசியத்தை மறைத்து அமீனாவுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

தனது காதலன் செய்த துரோகத்தை அறிந்த அமீனா, கடும் ஆத்திரமடைந்து அவரைப் பழிவாங்கத் திட்டமிட்டார். இதற்காக விசர்ஜீத்தை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த காதலனுக்கு, அவர் பருகிய பாலில் அமீனா திட்டமிட்டு மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். பால் குடித்த சிறிது நேரத்திலேயே விசர்ஜீத் ஆழ்ந்த மயக்க நிலைக்குச் சென்றுள்ளார்.

   

அவர் மயக்கமடைந்து இருந்த நள்ளிரவு நேரத்தில், அமீனா ஒரு கூர்மையான கத்தியால் விசர்ஜீத்தின் அந்தரங்க உறுப்பைத் துண்டித்துள்ளார். வலியால் அலறிய விசர்ஜீத், ரத்த வெள்ளத்தில் உயிருக்குத் துடித்த நிலையில், எப்படியோ சுதாரித்து அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   

தகவலறிந்த போலீசார் அமீனாவைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், “திருமணத்தை மறைத்து என்னைப் பலமுறை ஏமாற்றியதால் தான் நான் இப்படிச் செய்தேன்” என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், அமீனா மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.