குஷியோ குஷி… இனி தமிழகம் முழுவதும் மின்தடையே கிடையாது… மின்வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

By S.RISHVANA on பங்குனி 2, 2026

Spread the love

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் ஏப்ரல் மாதம் வரை மாநிலம் முழுவதும் எவ்வித திட்டமிடப்பட்ட பராமரிப்பு மின்தடைகளும் இருக்காது என்று தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் (TNPDCL) அதிரடியாக அறிவித்துள்ளது. பொதுவாக, துணை மின் நிலையங்கள் மற்றும் மின் மாற்றிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெற்று வருவதால், மாணவர்கள் தடையின்றி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த உத்தரவின்படி, சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வழக்கமாக மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தவிர்க்க முடியாத அவசர கால பழுதுநீக்கப் பணிகள் மற்றும் அவசர கால மின் பராமரிப்பு தவிர, வேறு எந்த காரணத்திற்காகவும் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின் வாரிய கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்பதால், கோடை காலத்தின் தொடக்கத்தில் மாணவர்களுக்கு இது பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

   

அரசின் இந்த முடிவிற்குப் பின்னால் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கோடைக்கால மின் தேவையும் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. கோடை காலத்தில் மின் நுகர்வு அதிகரிக்கும் என்பதால், தடையற்ற மின்சாரத்தை வழங்கத் தேவையான கூடுதல் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. மின் வாரியத்தின் இந்த அறிவிப்பு தேர்வுக் காலத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.