6 கொடுத்தால் சின்னம்… சின்னம் கேட்டால் 3 தான்… திமுகவின் கறார் நிபந்தனையால் அதிருப்தியில் வைகோ..!!

By Soundarya on பங்குனி 2, 2026

Spread the love

வரும் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக விதித்துள்ள நிபந்தனைகளால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும், அவை அனைத்திலும் தனிச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்றும் வைகோ உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், திமுக தலைமையோ இதற்கு முரணான நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது.

திமுக தரப்பில், 6 தொகுதிகள் வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், ஒருவேளை தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டதாகத் தெரிகிறது. திமுகவின் இந்த பிடி கொடுக்காத போக்கினால் வைகோ அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இது கூட்டணியில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.