நிஜமாவே இது உயிரோட தான் இருக்கா?… முதலையுடன் செல்ஃபி எடுத்த நபருக்கு நேர்ந்தது என்ன?… வைரலாகும் வீடியோ…!!!

By Rajeshwari on பங்குனி 1, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு திடுக்கிடும் வீடியோவில், நபர் ஒருவர் ஆக்ரோஷமான ராட்சத முதலை ஒன்றின் முதுகில் அமர்ந்து எவ்வித அச்சமுமின்றி நிதானமாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சாதாரணமாக மனிதர்களோ அல்லது விலங்குகளோ கண்டாலே வேட்டையாடத் துடிக்கும் முதலையின் அருகில் செல்வதற்கே அனைவரும் அஞ்சும் நிலையில், அந்த நபர் முதலையின் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட விதம் பார்ப்பவர்களின் நரம்புகளைத் தளர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்த ஆபத்தான சாகசத்தின் போது அந்த முதலை அசையாமல் அமைதியாக இருந்த போதிலும், இது போன்ற வனவிலங்குகளின் நடத்தை எப்போது மாறும் என்று கணிக்க முடியாது என்பதால், இணையவாசிகள் பலர் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

   

“>

   

இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. பலரும் அந்த நபரின் துணிச்சலைப் பாராட்டினாலும், ஒரு தரப்பினர் இது போன்ற உயிருக்கு ஆபத்தான செயல்கள் வெறும் சமூக வலைதளப் புகழுக்காகச் செய்யப்படுவது தேவையற்றது என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் முதலை உயிரோடு தான் இருக்கிறதா அல்லது அது பொம்மையா என்ற சந்தேகத்தையும் சில பயனர்கள் எழுப்பியுள்ளனர். எது எப்படியிருப்பினும், வனவிலங்குகளுடன் இத்தகைய ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுவது உயிருக்கே உலையாக முடியும் என்பதால் இது போன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.