actor Kamal Haasan

தலைவர் 173 படப்பிடிப்பு துவங்குவது எந்த நாளில் தெரியுமா? நெல்சன் படத்தில் ரஜினி கமல் நடிக்கும் ஷூட்டிங் குறித்தும் கசிந்த ரகசியம்!

By Elango on மாசி 28, 2026

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். தலைவர் 173 என இந்த படத்துக்கு தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பேமிலி டிராமாவாக எண்டர்டெயின்மென்ட் கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளது. சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் துவங்க உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் வரை படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் அடுத்த ஆண்டு 2027ம் ஆண்டில் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

   

இந்த படத்தை முடித்த பிறகுதான் நடிகர் ரஜினிகாந்த் கமலுடன் இணைந்து நடிக்கும் நெல்சன் திலீப்குமாரின் படம் ஷூட்டிங் துவங்க உள்ளது. எனவே தலைவர் 173 ஷூட்டிங் வரும் அக்டோபரில் முடிவடைய இருப்பதால் நவம்பர் மாதம் கமல் பிறந்த நாளில் அல்லது டிசம்பர் மாதம் ரஜினி பிறந்த நாளில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.