actor santhanam

வாங்கிய அட்வான்ஸ்சை திருப்பி கொடுங்க… நடிகர் சந்தானத்திடம் கேட்ட பிரபல தயாரிப்பு நிறுவனம் – மழுப்பிய காமெடி நாயகன்!

By Elango on மாசி 28, 2026

Spread the love

நடிகர் சிம்புவுடன் ஆரம்பத்தில் வல்லவன் மன்மதன் ஒஸ்தி போன்ற படங்களில் நடித்தவர் சந்தானம். அவர்களது காமெடி கூட்டணி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இதற்கிடையே காமெடி நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார். எனினும் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க முன்வந்தது.

மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன் முக்கியமான ரோலில் நடிக்க நடிகர் சந்தானமும் கமிட் செய்யப்பட்டு பெரும்தொகை அட்வான்ஸ் ஆக தரப்பட்டது. ஆனால் அந்த படம் டிராப் ஆகி விட்டது. இப்போது அந்த படத்துக்காக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ்சை டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் திருப்பி கேட்டுள்ளது. ஆனால் சிம்புவிடம் கொடுத்த அட்வான்ஸை திருப்பி கேட்கவில்லை.

   

ஏனென்றால் பிற்காலத்தில் சிம்பு நடிக்கும் படத்தை தயாரிக்கும் திட்டத்தில் டான் பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த சூழலில், கொடுத்த அட்வான்ஸ் பணம் எல்லாம் செலவாகிடுச்சு என்று நடிகர் சந்தானம் கூறியிருக்கிறார். மேலும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தில் சந்தானமும் வெயிட்டான ரோலில் நடிப்பதால் அதில் அட்வான்ஸ் வாங்கி தருவதாக டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சந்தானம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.