BREAKING: காலையிலேயே ஷாக் நியூஸ்… சிலிண்டர் விலை அதிரடி உயர்வு…!

By Nanthini on பங்குனி 1, 2026

Spread the love

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், மார்ச் மாத தொடக்கமான இன்று (மார்ச் 1, 2026), வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ. 29.50 உயர்ந்துள்ளது. இதன் மூலம், கடந்த மாதம் ரூ. 1,899.50-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த சிலிண்டர், தற்போது ரூ. 1,929-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு குறு வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

   

வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிகரித்தாலும், சாமானிய மக்களுக்கு ஓரளவு நிம்மதி அளிக்கும் வகையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் தொடர்ந்து ரூ. 900 என்ற பழைய விலையிலேயே நீடிக்கிறது. இதனால் இல்லத்தரசிகளும் பொதுமக்களும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

   

வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக உணவகங்களில் உணவுகளின் விலை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், இந்த அடுத்தடுத்த விலை மாற்றங்கள் பொருளாதார ரீதியாகப் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.