director atlee

இந்தியாவிலேயே இதுவரை யாரும் வாங்காத அதிக விலை லக்ஸரி சொகுசு கார்… இறக்குமதி செய்த விஜய் பட மாஸ் இயக்குனர் – இது வேற லெவல்பா!

By Elango on மாசி 25, 2026

Spread the love

ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அட்லி. பிறகு ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் என்ற 3 பிளாக்பஸ்டர் தொடர் வெற்றி படங்களை அட்லி கொடுத்து நட்சத்திர இயக்குனராக மாறினார்.

அதன்பிறகு இந்தியில் பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை அட்லீ டைரக்ட் செய்தார். இந்த படம் 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இப்போது ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை அட்லி டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 600 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

   

இப்போது ஒரு படத்தை இயக்க இயக்குனர் அட்லி 100 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் இயக்குனராக 7,5 கோடி ரூபாய் மதிப்புள்ள ROLLS ROYCE SPECTRE EV என்ற காரை அட்லீ வாங்கி வரலாற்றுச் சாதனை படித்துள்ளார். உயர்தர மின்சார வாகனம் அம்சம் கொண்ட இந்த காரை நாட்டிலேயே முதல் ஆளாக இயக்குனர் அட்லி இறக்குமதி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.