director h vinoth

பணம் மட்டுமே வாழ்க்கைன்னு இருக்காதீங்க… அதை விட இந்த விஷயங்களை பாருங்க – ஜனநாயகன் பட இயக்குனர் எச் வினோத் அட்வைஸ்!

By Elango on மாசி 25, 2026

Spread the love

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஜனநாயகன் பட இயக்குனர் எச் வினோத் கூறியதாவது, நான் அசிஸ்டன்ட் டைரக்டராக இருக்கும் போது எப்பவும் பசி இருந்தது. ஆனால் சாப்பாடு இருந்தது இல்லை. இப்போது எப்போதும் சாப்பாடு இருக்கிறது. ஆனால் பசி இல்லை. அதாவது இது இருந்தால் வாழ்க்கையில் எல்லா பிரச்சினையும் சரியாயிடும்ன்னு நினைக்கிறோம். அதுவந்து பணம் தான்.

ஆனால் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று சொல்லி புரிய வைக்க முடியாது. அதை வாழ்ந்துதான் புரிஞ்சிக்கணும். நான் சொல்றதையும் சில சமயம் சிலர் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லுவாங்க. படமாய் எடுத்துக் காட்டுவாங்க. அதைப் பார்த்து புரிஞ்சுக்கிற சில பேர் இருப்பாங்க. சிலர் பணம் தான் வாழ்க்கைன்னு இருப்பாங்க. ஆனால் வாழ்க்கைக்கு பெரிய சொத்து உங்களோட ஆரோக்கியமும் உங்களை சுத்தி இருக்கிற மனிதர்களும் தான் என்று இயக்குனர் எச் வினோத் கூறியிருக்கிறார்.