“நிமிஷத்தில் முடிந்த வாழ்க்கை”… ஒரு வாட்ஸ்அப் மெசேஜ், ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது… தற்கொலையில் வெளியான பகீர் தகவல்கள்…!!!

By Rajeshwari on மாசி 25, 2026

Spread the love

ஹைதராபாத் அம்பர்பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ராமராஜு, அவரது மனைவி மாதவி மற்றும் அவர்களது 24 வயது மகன் சஷாங்க் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் ஹோட்டல் தொழில் நடத்தி வந்த ராமராஜு, தொழிலில் ஏற்பட்ட கடும் நஷ்டம் மற்றும் கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக அவர் தனது நண்பருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார், ஆனால் அந்தத் தகவலை நண்பர் பார்ப்பதற்குள் மூவரும் உயிரிழந்துவிட்டனர்.

   

இதனால் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இது ஒரு திட்டமிட்ட கூட்டுத் தற்கொலை எனத் தெரியவந்துள்ளது. ராமராஜு தனது மனைவி மாதவியை தலையணையால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, பின்னர் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர்களது மகன் சஷாங்க் தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டு உயிரிழந்துள்ளார்.

   

இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை கடிதத்தில், நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து வாங்கிய கடன்களே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.