தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கண் சிமிட்டும் நேரம் புரியாத புதிர் போன்ற சில படங்களை தயாரித்து சிறு சிறு வேடங்களில் நடித்தவர் சரத்குமார். பிறகு புலன் விசாரணை படத்தில் வில்லனாக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக மாறினார். 1990களில் நாட்டாமை நட்புக்காக சூரியன் சூரியவம்சம் என பல வெற்றிப் பட்ஙகளை கொடுத்த சரத்குமார் இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சரத்குமார் கூறியதாவது, நான் 14000 சதுர அடியில் ஒரு வீட்டைக் கட்டினேன். அப்படி ஒரு வீடு கட்டணும்ன்னு ரொம்ப நாளா எனக்கு ஆசை. அதைப்பற்றி வீடியோ போடுறாங்க. அதில் சொல்றாங்க, நான் 500 கோடிக்கு இந்த வீட்டை கட்டியிருக்கேன்.
இவங்க சொல்றதை கேட்டுட்டு 500 கோடிக்கு என்ன வச்சிருக்கான்னு இன்கம்டேக்ஸ் வந்துடுவாங்க போல. 500 கோடி இருந்தா நான் ஏன் நடித்துக் கொண்டிருக்கிறேன். பேங்க்ல அந்த பணத்தை போட்டுட்டு அதுல வர்ற வட்டியிலேயே நான் வாழ்ந்திடுவேன் என்று நடிகர் சரத்குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
