“திரும்ப வந்துட்டோம்னு சொல்லு!”… ஓபிஎஸ் கூடாரத்தில் பலத்த அதிர்ச்சி… அதிமுகவில் இணைந்த 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள்….!

By Nanthini on மாசி 24, 2026

Spread the love

தேனி மாவட்டத்தில் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “மீண்டும் திமுக ஆட்சியே அமையும்” என ஓபிஎஸ் அண்மையில் தெரிவித்த கருத்து அவரது சொந்த அணியினரிடையேயே கடும் அதிருப்தியை உருவாக்கிய நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் தலைமையில் இந்த இணைவு விழா நடைபெற்றது.

கட்சித் தலைமை குறித்த அதிருப்தி மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த குழப்பம் காரணமாகவே, தங்களது தாய் கழகமான அதிமுகவிற்கே திரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றம் தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்-ன் செல்வாக்கிற்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுவதுடன், அதிமுகவின் கரத்தை வலுப்படுத்தும் செயலாகவும் கருதப்படுகிறது.