அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. குஷியில் எடப்பாடியார்….!

By Nanthini on மாசி 24, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து அதிமுகவுக்குத் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர். நேதாஜி ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் சி.பி. பிரபு, அகில இந்திய யாதவர் பாதுகாப்பு பேரவையின் தலைவர் டாக்டர் இராஜன் மற்றும் அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவையின் தலைவர் சோ.ஜெயமணி ஆகியோர் இன்று EPS-ஐ சந்தித்து வரும் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்தனர்.

இந்த ஆதரவு சந்திப்புகள் அதிமுக முகாமிற்கு கூடுதல் பலத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளன. தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், சமுதாய அமைப்புகளின் இந்த ஆதரவு தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பல்வேறு சிறிய கட்சிகளும் அமைப்புகளும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அணிதிரண்டு வருவது தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.