actress iniya

ஒல்லியாக இருந்தால் என்ன… குண்டாக இருந்தால் என்ன… சினிமாவில் நடிக்க அதுதான் ரொம்ப முக்கியம் – ஓபனாக பேசிய நடிகை இனியா!

By Elango on மாசி 21, 2026

Spread the love

வாகை சூடவா பொட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை இனியா. சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் அவர் மிகவும் செக்ஸியான கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் நடிகை இனியா கூறியதாவது, நான் தொடர்ந்து ஹீரோயினாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. சரியாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனதால் உடல் எடை அதிகரித்து விட்டது. ஒரு நடிகை எடை கூடி விட்டார் என்பதற்காக அவர் அக்கா அத்தை போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

குண்டாக இருப்பது பெரிய தவறு இல்லை. ஒல்லியாக இருந்த பல நடிகைகள் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள். ஆனால் நான் இப்போதும் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். குண்டாக இருக்கிறேனா ஒல்லியாக இருக்கிறேனா என்பது முக்கியமல்ல. சினிமாவில் எப்போதும் நடித்துக்கொண்டு இருப்பதுதான் முக்கியம் என்று நடிகை இனியா அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.