தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி..? காலையிலேயே வெளியான அதிர்ச்சி தகவல்..!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

தமிழகத்தில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை உயர்வால் அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்தால் சுமார் ₹25,000 கோடி வரை செலவாகும் என்பதால், ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் அரசு மேலும் நிதி நெருக்கடியில் சிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சிகள் மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகளை அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் மக்களுக்கு நிம்மதியைத் தந்தாலும், மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்த கவலையையும் அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது.