“மகளிருக்கு ₹2,000 + ₹2,000 சிறப்பு நிதி” இவர்களுக்கு மட்டும் கிடைக்காது… குண்டை தூக்கிப்போட்ட தமிழக அரசு…!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

தமிழக அரசு மகளிருக்கு ஆண்டுதோறும் ₹2,000 கோடைகால சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை ₹2,000-உடன் சேர்த்து, தற்போது பயனாளிகளாக உள்ள 1.31 கோடி பெண்களும் இந்த கூடுதல் தொகையைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், மகளிர் உரிமைத் தொகைக்காகப் புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்குத் தற்போது இந்தத் தொகை கிடைக்காது. அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அடுத்த ஆட்சிக் காலத்தில் அனுமதி அளிக்கப்பட்ட பின்னரே இந்த நிதி உதவி உறுதி செய்யப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.