இயக்குனர் ராஜமௌலி இயக்கிய படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருபவர் இசையமைப்பாளர் கீரவாணி. ஸ்டூடன்ட் நம்பர் 1 மகதீரா பாகுபலி பாகுபலி 2 ஈகா ஆர்ஆர்ஆர் என டைரக்டர் ராஜமௌலி இயக்கிய படங்கள் அனைத்துக்கும் இசையமைத்தவர் கீரவாணி தான். இப்போது ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு நடித்து வரும் வாரணாசி படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து இசையமைப்பாளர் கீரவாணியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது, வாரணாசி படத்தின் பாடல் கம்போசிங் ரெக்கார்டை ஏற்கனவே முடித்து விட்டோம். பின்னணி இசைப் பணிகளை வருகிற செப்டம்பரில் தொடங்கப் போகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் வாரணாசி படப்பிடிப்பு முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. மேலும் வரும் 2027ம் ஆண்டில் ஏப்ரல் 7ம் தேதி வாரணாசி படம் ரிலீஸ் ஆகிறது.
