actress abitha

அவர் படத்துல நடிக்கற ஆசையில் போனேன்… சோப்பை கைல கொடுத்து கழுவிட்டு வான்னு சொல்லிட்டார் – விக்ரம் பட நடிகை போட்டுடைத்த உண்மை!

By Elango on மாசி 17, 2026

Spread the love

கடந்த 1999ம் ஆண்டில் வெளியான சேது படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அபிதா. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை அபிதா கூறியதாவது, பாலா சாரை எப்ப பார்த்தாலும் எனக்கு சேது படம் ஆடிசன் ஷூட்டிங் தான் ஞாபகத்துல வருது. நான் அப்போ படங்களில் சின்ன சின்ன கேரக்டர் பண்ணிட்டு இருக்கும்போது பாலா சார் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி வர சொன்னாங்க.

நான் நல்லா டிரஸ் பண்ணிட்டு ரொம்ப மேக்கப் போட்டுட்டு அங்கே போனேன். போன உடனே கையில ஒரு சோப்பை கொடுத்து மூஞ்சிய நல்லா கழுவிட்டு வான்னு டைரக்டர் சொன்னார். ஏன்னு கேட்டேன். என்னோட படத்துக்கு மேக்கப் வேணாம். நீங்க சாதாரணமா எப்படி இருப்பீங்களோ அப்படி இருந்தால் போதும்ன்னு சொல்லிட்டார். அப்பவே நினைத்தேன். பாலா சார் கிட்ட ஏதோ இருக்குதுன்னு.

   

என்னோட இன்ரோடக்சன் சாங்குல எனக்கு டான்ஸ் ஆட வரலே. என்னை எல்லார் முன்னாடியும் டைரக்டர் திட்டிட்டார். நான் பயங்கரமா அழுதுட்டேன். அப்போ என்ன சொன்னார் என்றால், உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன். ஏன்னா நீ பெரிய ஆளா வரணும். உனக்கும் இது முதல் படம். எனக்கும் இது முதல் படம் அப்படீன்னு சொன்னார் என்று நடிகை அபிதா அந்த நேர்காணலில் சேது படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.