நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்..! மளமளவென குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு ரூ.960 சரிவு..!!

By Soundarya on மாசி 16, 2026

Spread the love

இன்று (பிப்.16, 2026) சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை சரிவு காரணமாக, இந்திய சந்தையில் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இன்று ஒரு சவரன் தங்கத்திற்கு ₹960 குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ₹120 குறைந்து ₹14,440-க்கும், ஒரு சவரன் ₹1,15,520-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை மளமளவென சரிந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி நேற்று விற்கப்பட்ட அதே விலையான ₹280-க்கே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே உள்நாட்டிலும் இந்த விலை குறைவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.