உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் சக்கேரி (Chakeri) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயதுடைய 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், 12 வயது சிறுவனைப் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகப் பரப்பிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம், பிப்ரவரி 11-ஆம் தேதி அந்த வீடியோ இணையத்தில் வைரலான பிறகே சிறுவனின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இதனால் கடும் அதிர்ச்சியும் பயமும் அடைந்த அந்தச் சிறுவன், யாரிடமும் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறவும் மறுத்து முடங்கிக் கிடந்துள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை இது குறித்துப் புகார் அளிக்கச் சென்றபோது, குற்றம் சாட்டப்பட்ட மாணவனின் குடும்பத்தினர் அவரைத் தாக்கித் தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், சக்கேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட 9-ஆம் வகுப்பு மாணவனை நேற்று (பிப். 14) அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது அந்த மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
