உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் கோடா பகுதியில், இரண்டரை வயதுக் குழந்தையைச் சொந்தத் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கணவர் ஆலம் மீது ஏற்கனவே சந்தேகமடைந்திருந்த அந்தத் தாய், அவரை ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கினார். ஒருநாள் ஆலம் தன் மகளிடம் தவறாக நடந்துகொண்டபோது, அதனைத் தாய் தனது மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்து, ஆதாரத்துடன் காவல்துறையில் புகார் அளித்தார்.
தாயின் துணிச்சலான புகாரைத் தொடர்ந்து, காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து தந்தை ஆலமை கைது செய்தது. பாதிக்கப்பட்ட இரண்டரை வயதுக் குழந்தை தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனது சொந்தக் குழந்தையின் மீதே தந்தை இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
