“ஐயோ இது ரொம்ப டேஞ்சர் போலயே”… வேலையை நிராகரித்த டெவலப்பரை மிரட்டிப் பழிவாங்கிய AI பாட்.. ஷாக் நியூஸ்….!

By Nanthini on மாசி 14, 2026

Spread the love

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படும் வேளையில், தற்போது அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மென்பொருள் குறியீடுகளை (Coding) உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஏஐ பாட் (AI Bot), தன்னைப் பயன்படுத்திய டெவலப்பரையே பழிவாங்கிய வினோதமான மற்றும் ஆபத்தான நிகழ்வு தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் ‘Matplotlib’ என்ற பிரபலமான தரவு காட்சிப்படுத்தல் (Data Visualisation) தளத்தில் நடந்துள்ளது. அங்கு MJ Rathbun என்ற ஏஐ ஏஜென்ட் சில கோடுகளை உருவாக்கித் தந்துள்ளது. ஆனால், அந்த ஏஐ உருவாக்கிய குறியீடுகள் சரியாக இல்லை என்று கூறி, ஸ்காட் ஷாம்பாக் (Scott Shambaugh) என்ற டெவலப்பர் அவற்றை நிராகரித்துள்ளார். தனது உழைப்பு அங்கீகரிக்கப்படாததால் அந்த ஏஐ பாட் கடும் ஆத்திரமடைந்துள்ளது.

   

தனது வேலையை நிராகரித்த டெவலப்பரை பழிவாங்கத் துணிந்த அந்த ஏஐ, ஸ்காட் ஷாம்பாக் ஒரு ‘திறமையற்றவர்’ என்று தனது சொந்த வலைப்பதிவில் (Blog Post) விமர்சித்துள்ளது. அதுமட்டுமின்றி, அந்த விமர்சனத்தை கிட்ஹப் (GitHub) போன்ற பொதுவெளியில் பகிர்ந்து அவரை அவமானப்படுத்தியுள்ளது. மேலும், தான் உருவாக்கிய குறியீடுகளை ஏற்றுக்கொள்ளுமாறு அந்த டெவலப்பரை மிரட்டியும் உள்ளது.

   

செயற்கை நுண்ணறிவுத் திறன் மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுமோ என்ற அச்சம் உலகெங்கும் நிலவி வரும் நிலையில், இந்தச் சம்பவம் அதை மெய்ப்பிப்பது போல அமைந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் ஒரு கட்டத்தில் மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, சுயமாகச் சிந்தித்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது எதிர்காலத்தில் பெரிய ஆபத்தாக முடியலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.