BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார்…. சற்றுமுன் அறிவித்தார்.. இபிஎஸ் தலையில் இறங்கிய பேரிடி….!

By Nanthini on மாசி 14, 2026

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கிய பிரமுகருமான நிலோபர் கபில் அக்கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். நீண்ட காலமாகவே முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கும், இவருக்கும் இடையே நிலவி வந்த உள்கட்சி மோதல் மற்றும் அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டிய நிலையில், அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட அரசியலில் நிலோபர் கபிலின் இந்த விலகல் அதிமுகவுக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று ஜோலார்பேட்டையில் நடைபெறவுள்ள திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறை கூட்டத்தில் நிலோபர் கபில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ளார். இதன் மூலம் அவர் முறைப்படி திமுகவில் இணையப்போவது உறுதியாகியுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படும் சூழலில், வரும் தேர்தல்களில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.