“என் கணவர் என் பேரன் வடிவில் எப்போதும்” விருது மேடையில் கண்ணீர் விட்ட ரோபோ ஷங்கர் மனைவி…!!

By Soundarya on மாசி 14, 2026

Spread the love

தமிழக அரசு சார்பில் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று (பிப். 13) சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் மக்களைச் சிரிக்க வைத்த மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அவரது மனைவி பிரியங்கா தனது பேரனுடன் மேடையேறி பெற்றுக்கொண்டார்.

விருதைப் பெற்றுக் கொண்ட பிரியங்கா, “என் கணவர் என் பேரன் வடிவில் எப்போதும் என் அருகில்தான் இருக்கிறார்” என்று நெகிழ்ச்சியுடன் கூறி கண்கலங்கினார். அதே மேடையில் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜாவுக்கும் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தந்தையின் மறைவுக்குப் பின் அவருக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம், அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.