அதிர்ச்சி..! எனக்கு தொழில் தொடங்க பணம் கொடுக்க மாட்டீங்களா..? அப்போ சாவுங்க… தாய்-தந்தையை கொன்ற மகன்..!!

By Soundarya on மாசி 12, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், புதிதாக தொழில் தொடங்குவதற்குப் பணம் தர மறுத்த காரணத்திற்காக, பெற்றோரையே மகன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவிட்டுச் சொந்த ஊர் திரும்பிய ரோஹன் சந்திரபட் என்பவர், அங்கு ஒரு புதிய ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார். இதற்காகத் தனது பெற்றோரிடம் பெரும் தொகையைக் கேட்டு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் பணம் தர முன்வராததால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகராறு உச்சகட்டத்தை எட்டியபோது, ஆத்திரமடைந்த ரோஹன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்துத் தனது தந்தை மற்றும் தாயை சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், ரோஹனை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மென்பொருள் வல்லுநர் தனது லட்சியத்திற்காகப் பெற்றோரையே தீர்த்துக்கட்டிய இந்தச் சம்பவம் பெங்களூரு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.