கூல்டரிங்க்ஸ் குடிச்ச மிச்சத்த பாட்டில்ல ஊத்தி… டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் அருவருப்பு… வெளியான பகீர் வீடியோ..!!

By Soundarya on மாசி 12, 2026

Spread the love
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் (முன்பு பெரோஸ் ஷா கோட்லா) நடந்து வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் போது, ரசிகர்கள் குடித்துவிட்டு மீதம் வைத்த குளிர்பானங்களை ஊழியர்கள் மீண்டும் பாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்வதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி நடைபெற்ற நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்குப் பிறகு இந்தச் சம்பவம் படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அந்த வீடியோவில், விற்பனை மையத்தில் இருக்கும் ஊழியர்கள் பயன்படுத்தப்பட்ட பேப்பர் கப்களில் (Paper cups) மிஞ்சியிருந்த குளிர்பானத்தைச் சேகரித்து, ஒரு பெரிய பாட்டிலில் ஊற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த அசுத்தமான குளிர்பானங்கள் அடுத்த போட்டிகளின் போது மீண்டும் விற்பனை செய்யப்படலாம் என வீடியோவைப் பகிர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் சுகாதாரச் சீர்கேடு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் (DDCA) மற்றும் பிசிசிஐ (BCCI) இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்