தங்கம் இருக்குற விலையில.. இவங்க வேற கடுப்பேத்துறாங்களே.. மணமகன் வீட்டாருக்கு ‘தங்க பிஸ்கட்’ மழை பொழிந்த மணமகளின் அண்ணன்.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

By Soundarya on மாசி 12, 2026

Spread the love

சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட திருமணத்தில், மணமகளின் சகோதரர் மணமகன் வீட்டாருக்கு 24 காரட் தங்க பிஸ்கட்டுகளைப் பரிசாக வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆடம்பரமான திருமண நிகழ்வில், மணமகளின் சகோதரர் ஒரு பெட்டி நிறைய தங்கக் கட்டிகளைக் கொண்டு வந்து, மணமகனின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தலா ஒன்று வீதம் வழங்கினார்.

இந்தக் காணொளியில் ஒரு சுவாரஸ்யமான தருணமும் பதிவாகியுள்ளது. குடும்பத்தினர் ஒவ்வொருவராகத் தங்க பிஸ்கட்டைப் பெற்றுக்கொண்டபோது, மணமகன் தரப்பைச் சேர்ந்த ஒரு முதியவர் மட்டும் விளையாட்டாக இரண்டு தங்கக் கட்டிகளை எடுத்துக்கொண்டார். இந்தச் சிறு குறும்புத்தனமான செயல் நெட்டிசன்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியதுடன், இந்த வீடியோ உலகளவில் வைரலாகவும் காரணமாக அமைந்தது.