நீயெல்லாம் ஒரு தாயா..? மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் ஓட்டம்.. இப்போ அவருக்கும் ‘டாட்டா’ காட்டிட்டு மைத்துனருடன் எஸ்கேப்… பெண்ணின் அதிரடி லீலைகள்..!!

By Soundarya on மாசி 12, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், 38 வயது பெண் ஒருவர் தனது மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட 18 வயது இளைஞனுடன் ஓடிச் சென்ற நிலையில், தற்போது அவரையும் ஏமாற்றிவிட்டுத் தனது மைத்துனருடன் தப்பியோடியுள்ள விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, சரிதா என்ற அந்தப் பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளைக் கைவிட்டு, தனது மகள் திருமணம் செய்யவிருந்த ராகுல் என்ற இளைஞனுடன் காதல் வயப்பட்டு மாயமானார். இருவரும் பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் வசித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 6-ம் தேதி ராகுல் வேலைக்குச் சென்ற நேரத்தில் சரிதா அங்கிருந்து மறைந்துள்ளார்.

தற்போது ராகுல் காவல்துறை அளித்துள்ள புகாரில், சரிதா தன்னையும் கைவிட்டுவிட்டு தனது சகோதரியின் கணவருடன் (மைத்துனர்) ஓடிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், செல்லும் போது தன்னிடம் இருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த நகைகளையும் சரிதா எடுத்துச் சென்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மகளின் வருங்கால கணவருடன் ஓடிச் சென்று, இப்போது அவரையும் நடுத்தெருவில் விட்டுவிட்டு மற்றொருவருடன் தப்பியோடிய இந்தப் பெண்ணின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.