தோற்றால் வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகிடுவார்… அவரை நம்பி யாரும் பணத்தை செலவு பண்ணாதீங்க… பரபரப்பை கிளப்பிய விஜய்யின் முன்னாள் மேலாளர்..!!

By Soundarya on மாசி 12, 2026

Spread the love

விஜய்யின் முன்னாள் மேலாளரும், தற்போது திமுக நிர்வாகியுமான பி.டி. செல்வகுமார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து முன்வைத்துள்ள இந்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 11, 2026 அன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். “விஜய்க்குத் தோல்வி என்றால் பிடிக்காது. வரும் 2026 தேர்தலில் படுதோல்வி அடைந்து, அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலைக்கு அவர் தள்ளப்படுவார். அந்த நேரத்தில் அரசியலும் வேண்டாம், சினிமாவும் வேண்டாம் என்று அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிடுவார்” என்று விமர்சித்துள்ளார்.

விஜய்யை ஒரு “துரோகி” என்றும், அவர் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பது நடிகை திரிஷாவிற்குத்தான் தெரியும் என்றும் தனிப்பட்ட முறையிலும் சாடியுள்ளார். மேலும், “இளைஞர்கள் விஜய்யை நம்பிப் பணத்தைச் செலவு செய்ய வேண்டாம்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.