With Love

அடேங்கப்பா… 6 நாட்களில் வசூலை அள்ளிய வித் லவ் படம்… இத்தனை கோடிகளா? ஹீரோவாகவும் ஜெயித்த அபிஷன் ஜீவிந்த்!

By Elango on மாசி 12, 2026

Spread the love

கடந்த ஆண்டில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் மொத்தம் 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தின் இளம் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் முதல் படத்திலேயே பெரிய வரவேற்பை பாராட்டை ரசிகர்களிடம் பெற்றார்.

இப்போது அவர் ஹீரோவாக அறிமுகமாகி திரைக்கு வந்த படம் வித் லவ். இந்த படத்தை புதுமுக இயக்குனர் மதன் டைரக்ட் செய்திருக்கிறார். சௌந்தர்யா ரஜினிகாந்த் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் அறிமுகமாகி உள்ளார். இந்த படம் ரிலீஸான 6 நாட்களில் இதுவரை 16.8 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.