மூக்கு குத்திக்கொள்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மருத்துவர் ஒருவர் பகிர்ந்த எக்ஸ்ரே புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மூக்குத்தி அணிந்திருந்த பெண் ஒருவருக்கு, அதன் திருகாணி போன்ற ஒரு பகுதி எதிர்பாராதவிதமாகத் தளர்ந்துள்ளது. அவர் மூச்சை பலமாக உள்ளிழுத்தபோது, அந்தச் சிறிய உலோகம் தற்செயலாக அவரது சுவாசப் பாதை வழியாக நுரையீரலுக்குள் சென்று சிக்கிக்கொண்டது.
ప్రాణం మీదకు తెచ్చిన ముక్కుపుడక
ముక్కు పుడక పెట్టుకునే వారు జాగ్రత్తగా ఉండాలని హెచ్చరిస్తూ ఒక డాక్టర్ షేర్ చేసిన ఎక్స్రే ఫొటో వైరలవుతోంది. ఒక మహిళ తన ముక్కు పుడక వెనుక ఉండే పిన్ను లూజుగా పెట్టుకోవడంతో గాలి పీల్చే క్రమంలో అది పొరపాటున ఊపిరితిత్తుల్లోకి వెళ్లిపోయింది. ఆ రోగికి… pic.twitter.com/zLxquIiEUt
— ChotaNews App (@ChotaNewsApp) February 6, 2026
இந்த இக்கட்டான நிலையில், மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளித்து அந்த உலோகப் பகுதியை வெளியே எடுத்தனர். சிறிய கவனக்குறைவு கூட உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது. எனவே, மூக்குத்தி போன்ற சிறிய நகைகளை அணியும்போது அவை உறுதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நகைகளை கையாளுவதில் கூடுதல் கவனம் தேவை என்றும் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
