actor Madhavan

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத்குமாரிடம் இருந்து நான் அதை கற்றுக்கொண்டேன் – நடிகர் மாதவன் சொன்ன சீக்ரெட்!

By Elango on மாசி 6, 2026

Spread the love

தமிழ் இந்தி என ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் மாதவன். தமிழில் அலைபாயுதே ரன் ஜே ஜே அன்பே சிவம் மன்மதன் அம்பு போன்ற பல படங்களில் மாதவன் நடித்திருக்கிறார். அவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் சாக்லேட் பாய் என வர்ணிக்கப்பட்டவர். இப்போது 50 வயதுகளை கடந்த நிலையில் வெள்ளை முடி தலை, வெள்ளை நிற தாடி மீசையுடன் மாதவன் பல இடங்களில் காணப்படுகிறார்.

இதுகுறித்து நடிகர் மாதவன் கூறியதாவது, சூட்டிங் ஸ்பாட்டில் நான் நடிக்கும் போது கதாபாத்திரத்திற்காக மற்றும் தேவையான நேரங்களில் மட்டும் தலை முடிக்கு டை அடிக்கிறேன். மற்ற நேரங்களில் தலைமுடிக்கு டை அடிப்பதில்லை. உண்மையான வயதை இயல்பாக காட்டுவதில் எந்த தவறும் இல்லை. இதை நான் ரஜினி, அஜீத்குமார் ஆகியோரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்று நடிகர் மாதவன் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.