“20 குழந்தைகளின் உயிரைக் காக்க” தன்னுயிரைத் தந்த தியாகத்தாய்.. தேனீத் தாக்குதலில் வீரமரணமடைந்த அங்கன்வாடி ஊழியர் கஞ்சன் பாய்..!!

By Soundarya on மாசி 5, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் நீமச் மாவட்டம் ரன்பூர் கிராமத்தில், அங்கன்வாடி சமையல் உதவியாளராகப் பணியாற்றி வந்த கஞ்சன் பாய் மேக்வால் (40), சுமார் 20 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றத் தனது உயிரையே தியாகம் செய்துள்ளார். அங்கன்வாடி மையத்தின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது திடீரென ஒரு தேனீக் கூட்டம் பாய்ந்தபோது, கஞ்சன் பாய் சற்றும் யோசிக்காமல் அங்கிருந்த தார்ப்பாய்கள் மற்றும் பாய்களைக் கொண்டு குழந்தைகளை முழுமையாக மூடிப் பாதுகாத்தார்.

குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பான அறைக்குள் செல்வதை உறுதி செய்யும் வரை, அவர் தேனீக்களிடமிருந்து நகரவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான தேனீக்கள் அவரைத் தொடர்ந்து கொட்டியதில் அவர் மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு ஒரே வாழ்வாதாரமாக இருந்த கஞ்சன் பாயின் இந்த வீரச் செயலை நாடு முழுவதும் நெகிழ்ச்சியுடன் போற்றி வருகிறது.