actor Kamal Haasan

ஓட்டையும் இந்த நாட்டையும் கமல்ஹாசன் விற்கவே மாட்டான் – நாடாளுமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் ஆவேசம்!

By Elango on மாசி 5, 2026

Spread the love

மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் நேற்று நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது என்கிரீர்கள். அது ஓரளவு உண்மைதான்.

தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே… தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும் நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.